ETV Bharat / city

லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ் - லிஃப்டில் சிக்கிய காமெடி நடிகர் புகழ்

திருச்சியில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் புகழ் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம்,அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cook with the Comali event famous actor Pugazh trapped in the elevator in Trichy

author img

By

Published : Feb 7, 2022, 3:28 PM IST

திருச்சி: திருச்சியில் பிரியாணி ஹோட்டல் திறப்பு விழாவிற்கு, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பிரபலம் நடிகர் புகழ் வந்திருந்தார்.

3ஆவது மாடியில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்த அவர், அதன் பின்னர் தரைதளத்தில் இருந்த ஜூவல்லரிக்கு செல்ல முயன்றார். அப்போது மாடிப்படிக்கட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், லிஃப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல விழா ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து அவரை லிஃப்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

புகழுடன் ஒரிருவர் மட்டுமே லிஃப்டில் செல்ல போட்டோகிராபர்கள், பாக்சர்கள் உள்ளிட்டப் பலர், மாடிப்படிக்கட்டுகள் வழியாக தரைதளத்தில் உள்ள ஜூவல்லரிக்கு விரைந்து சென்றனர்.

தரைதளத்தில் அவர்கள் சென்று காத்திருந்தபோதும் லிஃப்ட் கீழே வரவில்லை. 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிஃப்ட் வராததால், கீழே காத்திருந்தவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக லிஃப்ட் கீழே வந்திறங்கிய போது அதிலிருந்து வேர்க்க விறுவிறுக்க புகழ் வெளியில் வந்தார்.

லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ்

விஷயம் என்னவென்று கேட்டபோது 10 நிமிடத்திற்கும் மேலாக லிஃப்ட் வேலை செய்யாததால், பாதி வழியிலேயே லிஃப்ட் நின்று போனது. பிறகு திரும்ப இயக்கப்பட்டு வந்ததாகப் புகழ் தொிவித்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கூட்டுச்சதி வழக்கு: திலீப் மற்றும் அவரின் கூட்டாளிக்கு ஜாமீன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.