திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், நபி உதய தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், "இந்தியாவில் இப்போது தான் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று வருகிறார்கள். பெண்கள் ஒருவர் படித்தால் அந்த குடும்பத்திற்குப் பேரூதவியாக இருக்கும். ஆகையால், பெண்கள் இன்னும் அதிக அளவில் உயர்கல்வியை முடித்துவிட்டு உயர் பதவிக்கு வருவதோடு, அரசியலுக்கு அதிகளவில் முன்வர வேண்டும்.
நபி வழியை நாம் பின்பற்றினால் தான், நாம் அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ முடியும். திருகுர்ஆனை படித்தால், அவற்றில் எல்லாம் விஷயங்களுக்கும் தெளிவான விளக்கம் இருக்கின்றது" என்றார்.
இதையும் பார்க்க: 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் பிரபல ஹீரோயின்!