ETV Bharat / city

கஞ்சா போதையில் நடுரோட்டில் சுற்றித்திரிந்த ரகளை ஆசாமிகள் - Viral

திருச்சி அடுத்த மணப்பாறையில் கஞ்சா போதையில் சாலையில் தாறுமாறாக சுற்றும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஞ்சா போதையில் நடு ரோட்டில் ரகளை; வாலிபர்களின் வைரல் வீடியோ

author img

By

Published : Jul 29, 2022, 5:56 PM IST

திருச்சி மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் நேற்று மாலை மூன்று இளைஞர்கள் போதையில் சுற்றித்திரிந்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தள்ளாடியபடி சாலையில் சுற்றித்திரிந்த போதை ஆசாமிகள் அவ்வழியே பள்ளி முடிந்து சென்ற மாணவிகள் மற்றும் பொதுமக்களின் மீது இடிப்பது போல் சென்று அலப்பறை செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் போதையின் உச்ச கட்டத்திற்கே சென்ற ஆசாமிகள் அவ்வழியே சென்ற மினிப்பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நிலையில் அதனைக்கண்டு பொறுத்திராத அங்கிருந்த வேன் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் போதை இளைஞர்களைப் பிடித்து சரமாரியாக அடித்து உட்கார வைத்ததாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் லேசான காயங்களுடன் உச்ச போதையில் இருந்த இளைஞர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், மணப்பாறைப் பகுதியில் காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை பெயரளவில் இருப்பதாலேயே இது போன்ற சமுதாய சீர்கேடான சம்பவங்கள் நடப்பதாகவும், கஞ்சாவை ஒழிக்க முடியாத அளவிற்கு உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனைத்தெரிவித்துள்ளனர்.

கஞ்சா போதையில் நடுரோட்டில் சுற்றித்திரிந்த ரகளை ஆசாமிகள்

இதையும் படிங்க: பைக் மோதி தூக்கி வீசப்பட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியர்; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.