ETV Bharat / city

தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 24, 2019, 11:43 PM IST

திருச்சி: தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரி ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர், "நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான பி எஸ் என் எல், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியில் இருந்த சேமிப்பு நிதியான பல லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் நல பாதுகாப்பு சட்டங்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து தொழிலாளர்களின் வேலை மற்றும் சம்பள பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. அதோடு 29 மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்கள் காலாவதி ஆக்கப்படுகிறது. இதன் மூலம் 4 கோடி கட்டிடத் தொழிலாளர்களின் வாரிய பதிவுகள் ரத்தாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்து வந்த பயன்கள் இனி தொழிலாளர்களுக்கு கிடைக்காது. ஆகவே தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ரிசர்வ் வங்கியிலிருந்த பல லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு நிதி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Intro:தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரி ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Body:திருச்சி:
தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் மணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நிர்வாகிகள் செல்வராஜ், திராவிடமணி, சிவா, சுப்பிரமணியன், சிவசூரியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாநில துணை தலைவர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியில் இருந்த சேமிப்பு நிதியான பல லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் நல பாதுகாப்பு சட்டங்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து தொழிலாளர்களின் வேலை மற்றும் சம்பள பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. அதோடு 36 மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்கள் காலாவதி ஆக்கப்படுகிறது. இதன் மூலம் 4 கோடி கட்டிடத் தொழிலாளர்களின் வாரிய பதிவுகள் ரத்தாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்து வந்த பயன்கள் இனி தொழிலாளர்களுக்கு கிடைக்காது. ஆகவே தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: சுரேஷ்
மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம்.

Conclusion:ரிசர்வ் வங்கியில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.