ETV Bharat / city

பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிநபர் தர்ணா போராட்டம்! - dharna

திருச்சி: பொதுப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனிநபர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

தனிநபர் தர்ணா போராட்டம்
author img

By

Published : Jul 2, 2019, 7:41 AM IST

திருச்சி மாவாட்ட முசிறி கிராமத்தில் உள்ள பொதுப் பாதைகளை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி, ராமச்சந்திரன் என்பவர் மாவாட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

இதுப்பற்றி அவர் தெரிவித்ததாவது, " பொதுப் பாதைகளை சிலர் ஆக்கிரமித்தது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நூறு தடவைக்கும் மேல் மனு கொடுத்து விட்டேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பொதுப் பாதைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இந்த போக்கை கண்டிக்கும் விதமாத தனி நபராக இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்" என தெரிவித்தார்.

மாவாட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரனை காவல்துறையினர் சமரசம் செய்து, பின்னர் ஆட்சியரிடம் அழைத்துச் செல்லப்பட்டு மனுவை கொடுத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன்

Intro:100 முறைக்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்

Body:திருச்சி:
பொது பாதை பிரச்சினைக்காக 100 முறைக்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தனிநபர் ஒருவர் போராட்டம் நடத்தினார்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ஆட்சியர் சிவராசு தலைமையில் நடந்தது. அப்போது திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மனு அளிப்பதற்காக வந்தார். இவரது கிராமத்தில் உள்ள பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார்.
ஏற்கனவே இந்த பிரச்சினைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் 100 முறைக்கு மேல் மனு கொடுத்து விட்டதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறிய அவர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குறைதீர் கூட்டம் நடந்த அரங்கின் வெளியே தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரனை போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
இதன் பின்னர் அவர் ஆட்சியரிடம் அழைத்துச் செல்லப்பட்டு மனு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Conclusion:குறைதீர் கூட்ட அரங்கின் வெளியே தனிநபராக ராமச்சந்திரன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.