ETV Bharat / city

வேட்புமனு நிராகரிப்பு- முன்னாள் ராணுவ வீரர் தர்ணா!

திருப்பூர்: தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் செல்வராமலிங்கம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

tirupur
author img

By

Published : Mar 29, 2019, 2:32 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முன்னாள் ராணுவ வீரர் செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும், பரிசீலனையின்போது தனக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செல்வராமலிங்கம் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தூத்துக்குடியில் கனிமொழி, தமிழிசை ஆகியோரது வேட்புமனுக்கள் நேரமெடுத்து பெறப்படும்போது தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி, தமிழிசை ஆகியோரின் மனு நிராகரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை ஏற்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்திருக்கிறேன்' என தெரிவித்தார்.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் முன்னாள் விமான படை வீரர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம். தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி போல தனக்கும் நேரம் கொடுத்திருக்க வேண்டும், இல்லை என்றால் அவர்கள் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக கார்கில் போராளியும் முன்னாள் விமான படை வீரருமான அந்தியூரை பூர்வீகமாக கொண்ட  செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 27ம் தேதி பரிசீலனைக்கு 11 மணிக்கு திருத்தம் செய்து தரவேண்டும் என அறிவித்திருந்தனர். காலை 10.30 மணிக்கே தான் வந்த போதும் அதிகாரிகள் இல்லாததால் திருத்தம் செய்து தரமுடியாமல் போனதாகவும் 11 மணிக்கு துவங்குவதாக அறிவித்திருந்த பரிசீலனை கூட்டம் 12 மணிக்கு துவங்கியதாகவும் துவங்கிய உடன் தனது வேட்புமனு நிராகரிக்க பட்டதாக அறிவிக்கப்பட்டது உள்நோக்கத்துடன்.செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் மின் அஞ்சல் மூலமாக புகார் செர்துள்ளதாகவும். இன்று தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தனி ஒருவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.  தூத்துக்குடி யில் கனிமொழி மற்றும் தமிழிசை வேட்புமனு க்கள் நேரமெடுத்து பெறப்படும் போது எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.   எனது வேட்புமனுவை நிராகரித்தால் இவர்களது வேட்புமனுவையும் நிராகரிக்க வேண்டும் . அல்லது எனது வேட்புமனுவை ஏற்க வேண்டும் எனவும்  பேட்டியளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.