ETV Bharat / city

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் 3 வயது சிறுமியின் செயல்!

பல்லடம் பகுதியிலுள்ள ஏடிஎம் வளாகத்தில் சிதறிக்கிடந்த காகிதங்களை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் போட்டு, குப்பைத் தொட்டியை ஒழுங்குப்படுத்தி வைக்கும், 3 வயது சிறுமியின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிறுமி
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிறுமி
author img

By

Published : Jan 1, 2021, 9:21 PM IST

திருப்பூர் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் நேற்று (டிச.31) தனது 3 வயது குழந்தை புகழ்யாவுடன் தாராபுரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவருடன் குழந்தை புகழ்யாவும் சென்றிருக்கிறாள். அங்கு சென்ற சிறுமி, ஏடிஎம் வளாகத்திற்குள் கீழே சிதறிக் கிடந்த காகிதங்களைப் பார்த்தும் அதனை எடுத்து அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டுள்ளார். தொடர்ந்து, அந்தக் குப்பைத் தொட்டியை ஏடிஎம்மின் மூலையில் தள்ளி ஒழுங்குப்படுத்திவைத்தார்.

குழந்தையின் இந்தச் செயல்களை பாபு செல்போனில் காணொலியாக எடுத்து அதனைத் தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருவதுடன், குழந்தை புகழ்யாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் சிறுமி

தான் ஏதும் சொல்லாமலே குழந்தை அவ்வாறு செய்தது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறுகிறார் புகழ்யாவின் தந்தை பாபு.

ஏடிஎம் வளாகத்திற்குள் குப்பைத்தொட்டி இருந்தும் பெரும்பாலான பெரியவர்கள் காகிதங்களை குப்பை தொட்டிக்குள் வீசாமல், கீழே வீசிச் செல்லும் நிலையில், காகிதங்களை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் போடும் மூன்று வயது சிறுமியின் செயல் காண்போரை புன்னகைக்க வைப்பதுடன், ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.

இதையும் படிங்க: வன விலங்குகளை விரட்ட புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.