ETV Bharat / city

POCSO Law: தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு - அன்பில் மகேஷ்

பாலியல் துன்புறுத்தலிலிருந்து தனியார் பள்ளி மாணவர்களைக் காக்க விழிப்புணர்வு (POCSO Law awareness) ஏற்படுத்தப்படும் என நூலகத் திறப்பு விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்
POCSO Law: தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு
author img

By

Published : Nov 16, 2021, 2:23 PM IST

Updated : Nov 16, 2021, 3:01 PM IST

திருப்பூர்: உடுமலைப்பேட்டை தலைமை நூலகம் தமிழ்நாட்டில் மாதிரி நூலகமாக மாற்றப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று (நவம்பர் 15) நடைபெற்றது. தமிழ்நாட்டில் மூன்று நூலகங்கள் மட்டுமே இதுபோன்ற மாதிரி நூலகமாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தில் கணினி வசதி, அரசு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பல நூல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களுடன் கூடிய நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் நூல்கள் உள்ளன. மேலும், 17 ஆயிரம் பேர் உறுப்பினராக இருந்துவருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் அன்பில் மகேஷ்

நூலகங்களில் பயிற்சி

இந்த நூலகத்தின் திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்பின், மாணவர்களிடையே உரையாற்றிய அன்பில் மகேஷ், "அரசுப் பணிக்கான தேர்வுகளைச் சந்திப்பவர்களுக்கு அந்தத் தேர்வில் தேர்ச்சிபெற சற்று சிரமமாக இருக்கும். அவர்களுக்கு நூலகங்களில் பயிற்சி வகுப்புகள் அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தால் மட்டுமே அவர்கள் தேர்ச்சி பெற முடியும்.

புத்தகங்களுக்கு முக்கியத்துவம்

எனவே, நூலகங்களில் அரசு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடங்க முதலமைச்சரிடம் பேசுகிறேன். ஒரு நாட்டில் மாணவன் கல்வி கற்றால் அந்தக் குடும்பம் மட்டுமே வளம்பெறும். ஆனால் மாணவிகள் கல்வி கற்றால் அந்தச் சமூகமே வளர்ச்சி அடையும்" எனப் பேசினார்.

இதன்பின், செய்தியாளரைச் சந்தித்த அவர், "இதற்கு முன்பாக திமுக ஆட்சி செய்தபொழுது அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராமப் பகுதிகளில் ஏராளமான நூலகங்கள் திறக்கப்பட்டன. தற்பொழுது தமிழ்நாட்டில் நான்காயிரத்துக்கும் அதிகமான நூலகங்கள் நகர், ஊரகப் பகுதிகளில் செயல்பட்டுவருகின்றன. இதில், பல நூலகங்கள் போதிய வசதி இன்றியும், கட்டடங்கள் சிதிலமடைந்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

அங்குப் போதுமான நூல்கள் இருப்பு இல்லாமல் உள்ளன. இதனை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தற்போதைய முதலமைச்சர் தனக்குப் பொன்னாடைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் எனக்கூறி படிப்புக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

தனியார் பள்ளியிலும் விழிப்புணர்வு

பாலியல் தொல்லைகளிலிருந்து மாணவிகளைக் காக்க பள்ளிகளிலேயே மேலாண்மைக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறும்போது அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து, மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அரசுப் பள்ளிகள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை செயல்பட்டுவருகின்றன. அதில், போக்சோ சட்டம் குறித்து ஒரு மணி நேரம் விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்று, தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு'

Last Updated : Nov 16, 2021, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.