திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டதையடுத்து நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்பாக அமைச்சர்கள் வந்திருந்த வாகனங்களை சாலையின் நடுவில் நிறுத்தி விட்டு சென்றதால், அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற இரண்டு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டது.
போக்குவரத்து காவலர்கள், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...