திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், தண்ணீர்பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதனிடையே இன்று(ஆகஸ்ட் 4) காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையிநர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பின்னலாடை துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து