திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்த காலதாமதமாகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கோவை, திருப்பூர் விவசாயிகள், அங்கு நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகையாக அறிவித்து வழங்கிய ரூ.2500 பணத்தை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்தனர்.
தொடர்ந்து அந்தத் திட்டத்தை விரைந்துசெயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். திட்டத்தை நிறைவேற்றுவதில் இனியும் காலதாமதம் செய்யும்பட்சத்தில், வரும் பிப்ரவரி 8ஆம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படம், சின்னம் இடம்பெறாது'