திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அணை முன்பாக டிசம்பர் 8ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே 8ஆவது நாளான இன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் விவசாயிகளின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அனைவரும் தங்களது காதுகளில் பூ சுற்றியிருந்தனர்.
மேலும், தண்ணீர் வரும் பிஏபி பிரதான வாய்க்காலில் மின்கம்பங்கள் நடப்பட்டதை கண்டித்தும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தண்ணீர் விட மறுக்கிறார்கள் என்றும் கோஷம் எழுப்பினர்.