ETV Bharat / city

வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆட்சியர் பெயர்! - Tiruppur news

10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவரின் பெயர் மற்றும் அவர்களின் குடும்பப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

draft-voter-list-issue-in-tiruppur
Voter list issue
author img

By

Published : Dec 5, 2020, 5:06 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. இதில், 2009ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவானபோது ஆட்சியராக பணியாற்றிய சமயமூர்த்தி, தற்போதைய ஆட்சியருக்கு முன் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் இன்னும் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியராக சமயமூர்த்தி பதவி வகித்து 10 ஆண்டுகள் கடந்து, அவர் பணி மாறுதல் பெற்று சென்னை சென்றுவிட்ட சூழ்நிலையில், 10 ஆண்டுகளில் பல முறை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்றும், முதல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி, மாறுதலடைந்து சென்றுள்ளவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் குடும்ப பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர செய்யாததைக் காட்டுவதாக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர் . இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட குழு சார்பாக திருப்பூர் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவிநாசியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.