ETV Bharat / city

தேங்காய் சிரட்டையில் கலைநயம் - கைவினையில் அசத்தும் கல்லூரி மாணவி! - கைவினையில் அசத்தும் மாணவி

திருப்பூர்: கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆரம்பித்துத் தற்போது அதன் மூலமே வருமானம் ஈட்டி அசத்தி வரும் திருப்பூர் கல்லூரி மாணவி குறித்த சிறப்புத்தொகுப்பு.

coconut-lid-handicrafts
coconut-lid-handicrafts
author img

By

Published : Oct 8, 2020, 5:02 PM IST

Updated : Oct 9, 2020, 3:43 PM IST

உலகில் கைவினைப் பொருள்களுக்கான மதிப்பும், தேடலும் மிகவும் அதிகம். ஏனென்றால் கைகளில் தயாரிக்கக் கூடியப் பொருள்கள் கலைநயத்துடனும், நுட்பமாகவும் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களைச் சொல்லலாம். அந்தக் கார்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் பிற கார்களுக்கு அவ்வளவாகக் கிடையாது. பல்வேறு காரணங்களால் அக்கார்கள் அனைவராலும் விரும்பப்பட்டாடலும், முக்கியமான காரணம் அவை கைகளால் தயாரிக்கப்படுபவை.

அப்படி ரோல்ஸ் ராய்ஸில் தொடங்கி சாதாரண கிப்ட் வரை கைவினைப் பொருள்களுக்கான மவுசு அதிகமாகவே உள்ளது. கைவினைப் பொருள்கள் பல்வேறு பரிணாமங்களை கொண்டது. அது கைவினை கலைஞர்களுக்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும்.

எப்படி என்றால் உடைந்த முட்டை ஓடுகள்மீது உருவங்கள் வரையப்பட்டு மதிப்புகூட்டுப் பொருளாக்கப்படலாம். சாதாரண பென்சிலின் நுனிப்பகுதியில் சிலை வடிவமைக்கபடலாம். பயனற்ற பொருள்கள் அலங்காரப் பொருள்கள் ஆகலாம். ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் கலையும், கைவினையும் சேர்ந்தால் குப்பையும் வைரமாகும்.

அப்படி திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடுகளில் கழிவாக இருக்கும் தேங்காய் சிரட்டையிலிருந்து கைவினைப் பொருள்களை உருவாக்கி அசத்திவருகிறார். திருப்பூர் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஸ்வேதா, மிகவும் கலைத் திறன் கொண்டவர். அவர் ஆடை வடிவமைப்பு படிப்பைத் தேர்ந்தெடுத்தற்கு அதுவும் ஒரு காரணம்.அவர் ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் அதைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார். அவரது வீட்டில் இருக்கும் தேங்காய் சிரட்டையில் ஏதாவது செய்யலாமென விளையாட்டாக சிலவற்றை செய்யத் தொடங்கினார். நாளடைவில் தேங்காய் சிரட்டையில் விநாயகர் சிலை, கப்பல், பூச்செடி, சைக்கிள், டி-கப் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைநயம் மிக்க பொருள்களை உருவாக்கினார்.அப்படி செய்யப்பட்ட பொருள்களுக்கு வர்ணம் பூசுதல், மெருகேற்றுதல் உள்ளிட்ட வேலைப்பாடுகளை செய்கிறார். இறுதியில் தேங்காய் சிரட்டை கலைநயம் மிக்க பொருளாக உருமாற்றம் பெறுகின்றன. அத்துடன் அவை காண்போரின் கண்களைப் பறிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது பாட்டில்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்களைச் செய்துவருகிறார்.அவற்றைத் தனக்கு தெரிந்தவர்கள் வாயிலாக விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் முழு ஊக்கம் அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்வேதா "தேங்காய் சிரட்டை மூலம் ஒரு கலைநயம் மிக்க பொருளை உருவாக்க முயற்சித்தபோது எனது கல்லூரி நிர்வாகமும், பெற்றோரும் அதிக ஊக்கம் அளித்தனர்.அதன் காரணமாகவே என்னால் இதனைச் செய்ய முடிந்தது. இது ஆரம்ப கட்டம்தான், இதில் இன்னும் நுணுக்கங்கள் உள்ளன. அதனைக் கற்றுக்கொண்டுவிட்டால், எந்த உருவத்தையும் என்னால் தத்ரூபமாகச் செய்ய முடியும்" என தெரிவித்தார்.

மேலும் இந்தக் கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதோடு, விற்பனைக்காக ஒரு புதிய கடையை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: முப்பரிமாண தோற்றத்தில் கைவினை பொருள்கள் விற்பனை

Last Updated : Oct 9, 2020, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.