மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 13ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இச்சூழ்நிலையில் ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இன்று (டிச. 08) நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
இதற்கு தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று திருப்பூரில் பேக்கரி, உணவகங்கள், ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் பின்னலாடை நகரான திருப்பூரில் 70 விழுக்காடு அளவிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஆகியவையும் ஓடவில்லை.
இதனால் திருப்பூரில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பெரிய கடைவீதி, புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படிங்க: குடிச்சிக்கிட்டே கடிச்சிக்கலாமா... சுவையோடு பருகுங்கள் பிஸ்கட் டீ கப்