திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குள்பட்ட பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியிலுள்ள சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி அருகேயுள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த இரண்டு நாள்களாக அச்சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் (77) என்கிற ஓய்வு பெற்ற தபால் ஊழியர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் மகளிர் காவல் துறையினர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஜான் ஜார்ஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான ஜான் ஜார்ஜ்க்கு மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது