ETV Bharat / city

விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!

திருப்பூர்: விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

palanisamy
palanisamy
author img

By

Published : Feb 12, 2021, 1:11 PM IST

Updated : Feb 12, 2021, 2:29 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “குடிமராமத்து பணியை பற்றி குறைகூறும் கனிமொழிக்கு என்ன தெரியும். அவர் சென்னையில் வசிப்பவர். விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர் இங்கு வந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக கட்சியல்ல, அது ஒரு குடும்ப கம்பெனி. அதில் ஸ்டாலின்தான் சேர்மேன். மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் நிர்வாகிகள்.

விவசாயிகளுக்கு பயிர் கடன் ரத்து செய்யபட்டுள்ளது. முக்கியமாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாய பயன்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!

இதையும் படிங்க: பினாமி ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் - கனிமொழி எம்.பி.,

Last Updated : Feb 12, 2021, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.