தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும், கிராம மக்கள் புற்று நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த ஆலைக்கு எதிராக பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுகொல்லபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணைப்படி ஸ்டெர்லைட் ஆலை 2018ம் ஆண்டு மே 28ம் தேதி மூடப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி கேட்ட வேதாந்தா மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு