தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் வணிகர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விக்கிரமராஜா கூறியதாவது:-
இவையனைத்திற்கும் தீர்வாக பணிகளை ‘ஒரே சொல் ஒரே வாக்கு’ என்ற அடிப்படையில் வணிகர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசையே வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளோம்.
வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். முன்னதாக வணிகர்களின் கோரிக்கைகளை அரசின் காதுகளுக்கு எட்ட செய்யும் வகையில் இன்னும் இரு தினங்களுக்குள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து கடையடைப்பு போராட்டமும் படிப்படியான போராட்ட முன்னெடுப்புகளும் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.