ETV Bharat / city

சிப்காட் தொழிற்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

gftc
g
author img

By

Published : Apr 13, 2021, 3:35 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கரோனா பரவல் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஏப்ரல் 13) நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி நல அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார்.

முகாமில், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1365 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

கரோனா தடுப்பூசி முகாம்

4 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் வரும் 26-ந்தேதிக்குள் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி 45 வயதுக்கு மேற்பட்டோர் அணைவருக்கும் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றார்.

கரோனா தடுப்பூசி முகாம்
கரோனா தடுப்பூசி முகாம்

இந்த முகாமில், சிப்காட் தொழிற்பேட்டை திட்ட அலுவலர் லியோவாஸ், சிப்காட் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் ஜோ பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.