ETV Bharat / city

த.மா.கா கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல - ஜி.கே.வாசன் பேட்டி - Abhi Companies head S. Dharmaraj statue Opening

தூத்துக்குடி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது
author img

By

Published : Sep 14, 2019, 11:16 PM IST

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.டி.ஆர் பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"ஒரே இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரவர் தாய் மொழியையே முதல் மொழியாக கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் விதமாக அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்படும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கூட்டணி பலத்துடன் வெற்றிபெற்று உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம்.

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு புகுத்துவது என்பது சுமையை ஏற்படுத்தும். ஆகவே இது குறித்து அரசு முறையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லும் நிலையை நீக்குவதற்கு மத்திய அரசும், நிதித் துறையும் இணைந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தின் மீது மத்திய அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இருக்கவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

tmk head gk vasan byte, gk vasan came s.t.r school in thoothukudi,
எஸ். டி. ஆர் பள்ளி வளாகத்தில் அபி நிறுவனங்களின் தலைவர் எஸ். தர்மராஜ் திருவுருவ சிலையை திறந்து வைத்த போது...

காவிரி கூக்குரல் பயணத்தின் முக்கிய நோக்கம் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வர வேண்டும். காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் மரம் நடவேண்டும் என்பதுதான். தண்ணீர் என்பது பயிர் பிரச்னை மட்டுமல்ல. உயிர் பிரச்னையாகவும் மாறி உள்ளது. ஆகவே நிலத்தடி நீரை பெருக்குவதற்கு 130 கோடி இந்தியர்களும் முயற்சியை எடுக்க வேண்டும்" என்றார்.

Intro:ஒரே "இந்தி மொழி" என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது - த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒரே மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தி மொழி என்பது மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும். ஒரே இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரவர் தாய் மொழியையே முதல் மொழியாக கொள்ள வேண்டும். துணை மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாவது மொழியாக விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு மொழியையும் கற்று கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.
தமிழகத்தில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் விதமாக அனுமதி பெறாமல் பொதுஇடங்களில் வைக்கப்படும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும். மேலும் விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கூட்டணி பலத்துடன் வெற்றிபெறக்கூடிய அதிக இடங்களில் நின்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வென்றுகாட்டும். உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு புகுத்துவது என்பது சுமையை ஏற்படுத்தும். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சுமையை அதிகரிக்கும். ஆகவே இது குறித்து அரசு முறையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நன்மையைச் செய்யும் வகையில் அரசு விழிப்புணர்வை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லும் நிலையை நீக்குவதற்கு மத்திய அரசும், நிதித் துறையும் இணைந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தின் மீது மத்திய அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இருக்கவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பொருளாதார தேக்க நிலை குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறித்து கேள்வி கேட்டதற்கு, சட்டத்தின் முன்பு அனைவரும் சமமாக உள்ளோம். ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நல்லதீர்வுகள் எட்டப்படும்.
நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. காவிரி கூக்குரல் பயணத்தின் முக்கிய நோக்கம் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வர வேண்டும். காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் மரம் நடவேண்டும் என்பதுதான். ஆகவே அந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம். தண்ணீர் என்பது பயிர் பிரச்சினை மட்டுமல்ல. உயிர் பிரச்சனையாகவும் மாறி உள்ளது. ஆகவே நிலத்தடி நீரை பெருக்குவதற்கு 130 கோடி இந்தியர்களும் முயற்சியை எடுக்க வேண்டும்.
தேர்தலிலே தோழமை கட்சிகளுடன் ஒத்த கருத்துடன் இருந்து வெற்றி பெறுவோம் என்றார்.Conclusion:Visual in processing.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.