ETV Bharat / city

“நீர் - நிலம் - காற்று” மூன்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக தான் - யுவராஜா பளீர் - தூத்துக்குடி செய்திகள்

ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

tmc youth wing president addressing press in tuticorin

author img

By

Published : Dec 24, 2020, 4:29 PM IST

தூத்துக்குடி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (டிச.24) நடைபெற்றது.

இதில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (டிச., 23) அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் குற்றப்பத்திரிகையை எதிர்க்கட்சித் தலைவர்‌ மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். உண்மையில் ஊழலைப் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

ஏனெனில், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி. அதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதும் திமுகவின் ஆட்சிதான். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றிலும் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர். எனவே ஊழல் குறித்து திமுக பேசக்கூடாது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. திமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டது. எனவே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால், அவர் அதிமுகவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.