ETV Bharat / city

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு - மூன்று பெண்கள் கைது

author img

By

Published : Oct 4, 2021, 8:24 PM IST

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணப்பையைத்திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஓடும் பேருந்தில் பெண்னிடம் திருட்டு
ஓடும் பேருந்தில் பெண்னிடம் திருட்டு

தூத்துக்குடி: கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த போத்திராஜ் என்பவரது மனைவி வெங்கடபிரியங்கா. இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று வெங்கடபிரியங்கா மினி பேருந்தில் அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அவரது பையை மற்றொரு பெண் எடுத்துக்கொடுத்துள்ளார். பின்னர் கடைக்குச்சென்று பொருள்கள் வாங்கிவிட்டு, பையைப் பார்த்தபோது அதில் இருந்த பணப்பையைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த வெங்கடபிரியங்கா, உடனடியாக பேருந்து நிலையத்துக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, அவருடன் மினிப்பேருந்தில் பயணித்து, பையை எடுத்துக்கொடுத்த பெண் நின்றிருந்தார்.

அவரை பொதுமக்கள் உதவியுடன் வெங்கடபிரியங்கா பிடித்தார். அப்போது, அந்தப்பெண்ணுடன் இருந்த மற்ற இரண்டு பெண்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ராணி தலைமையிலான காவல் துறையினர், அந்தப் பெண்ணை பிடித்து சோதனையிட்டனர்.

திருட்டுப் பெண்கள் கைது

சோதனையில், வெங்கடபிரியங்காவின் பணப்பை, பிடிபட்ட பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் வாடிப்பட்டி அருகேவுள்ள பெரியஊர்தேரியைச் சேர்ந்த பாலசண்முகம் மனைவி செல்வி (38) எனத் தெரியவந்தது.

அவருடன் இருந்தது, சங்கர்தாஸ் மனைவி பாண்டியம்மாள் (30), தவமணி மனைவி வசந்தி (50) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மூவரும் வாடிப்பட்டியில் இருந்து பேருந்து மூலம் பல்வேறு ஊர்களுக்குச் சென்று, திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவர்கள் மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உல்லாச வாழ்க்கைக்கு திருட்டு - 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.