தூத்துக்குடி: கடற்கரை சாலையில் பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. அங்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவின் போது தங்கத்தேர் இழுப்பது வழக்கம். இறுதியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது இந்த தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது இந்த ஆலயத்தில் தங்கத்தேர் இழுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தங்கத்தேர் செய்வதற்காக கோயிலில் தேர், பொதுமக்களின் உதவியுடன் இழுத்து நிலை நிறுத்தப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை நிறுத்தினர். இதனை அடுத்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் அங்கு குவிந்து தேரை வழிபட்டு சென்றனர்.
இதையும் படிங்க: அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு - மத்திய கல்வித்துறை இணை அமைச்சர்