சென்னை: ’விடாமுயற்சி’ படத்தின் கதை என்னுடையது இல்லை என இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.
இதனைத்தொடர்ந்து அஜித் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Dir MagizhThirumeni:
— AmuthaBharathi (@CinemaWithAB) January 23, 2025
- My 15 Years dream was to work with #Ajithkumar sir. Suddenly I got a call from AK's Manager Suresh Chandra to direct #AK62. I was very surprised. And they told that we have to start the film immediately.
- #VidaaMuyarchi Story wasn't mine but I have… pic.twitter.com/00RRcNdsjO
இந்நிலையில் தனியார் ஊடகத்தில் விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பேசுகையில், “அஜித் சார் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய 15 வருட கனவு. திடிரென அஜித் சாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு AK62 படத்தை இயக்க அழைப்பு வந்தது. எனக்கு சர்ப்ரைசாக இருந்த நிலையில், படத்தை உடனே தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Dir MagizhThirumeni:
— AmuthaBharathi (@CinemaWithAB) January 23, 2025
- Myself & #Ajithkumar sir watching all the negativity that are being spread intentionally for #VidaaMuyarchi
- We are not taking care of the seriously because we both know the truth ❤️❤️
- You will witness Ajith sir of how fans like to see him in theatres.… pic.twitter.com/iIBIXIGQWS
இதனைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தை இயக்கினேன். ஆனால் இந்த படத்தில் கதை என்னுடையது இல்லை. திரைக்கதை மட்டும் என்னுடையது” என கூறியுள்ளார். மேலும் அஜித்குமாருடன் பணிபுரிந்தது குறித்து மகிழ் திருமேனி பேசுகையில், “ரசிகர்கள் நினைத்தது போன்ற அஜித் சாரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் பெண்கள் குறித்து எந்த விதத்திலும் தவறாக சித்தரிக்கக் கூடாது என்பதில் நானும், அஜித் சாரும் கவனமுடன் இருந்தோம்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் வைரலான ’கண்ணழகி’ மோனலிசா... பாலிவுட்டில் நடிக்க தேடி வந்த வாய்ப்பு! - MAHAKUMBH MELA MONALISA
என்னை பற்றியும், அஜித் சார் பற்றியும் வேண்டுமென்றே பரவும் தவறான செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். எங்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும் என்பதால் நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என கூறினார். விடாமுயற்சி படம் தள்ளிப் போனதற்கு அப்படம் breakdown படத்தின் ரீமேக் எனவும், அப்படக்குழுவினரிடம் ரீமேக் உரிமையை பெறவில்லை என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. தற்போது விடாமுயற்சி படத்திற்கு திரைக்கதை மட்டுமே தான் அமைத்துள்ளதாக மகிழ் திருமேனி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.