ETV Bharat / city

'மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக நிறைவேற்றித்தரும்' - கீதாஜீவன் - தமிழ்நாடு தேர்தல்

தூத்துக்குடி: மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர திமுகவிற்கு வாக்களியுங்கள் என தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கீதாஜீவன்
கீதாஜீவன்
author img

By

Published : Mar 27, 2021, 12:05 PM IST

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கீதாஜீவன் இன்று (மார்ச் 27) இனிகோநகர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய கீதா ஜீவன், "தமிழ்நாடு வேலைவாய்ப்பில் வெளிமாநிலத்தவர்கள் பணி அமர்த்தப்படுவதைத் தடுத்திடவும், ஏற்கனவே காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்பவும், தமிழ்நாடு மக்களின் உரிமையைக் காத்திடவும் திமுகவிற்கு வாக்களியுங்கள்.

இனிகோநகர் பகுதிக்கு ஏற்கனவே தண்ணீர் வசதி செய்துகொடுத்துள்ளேன். உயர் மின் கோபுர விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளேன். அதைத்தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கைகளின்படி வலை பின்னும் கூடமும் விரைவில் அமைத்துத் தரப்படும். அதேபோல மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக நிறைவேற்றித்தரும்" எனத் தெரிவித்தார்.

இந்தப் பரப்புரையின்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் ஏ.பி. சி.வி. சண்முகம், காங்கிரஸ் மாநகர், மாவட்டத் தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'என்னைக் கொல்ல முயற்சி' - கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.