இலங்கை கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி மீன்வளத் துறை கடலில் அதிக காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதை முன்னிட்டு தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் புயலுக்கு வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அறிவிப்பு விடுத்துள்ளதையடுத்து மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்களும் உடனே கரைதிரும்ப வேண்டும் என்றும் மீன்வளத் துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
இதையும் படியுங்க:
ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த ஆளுநர்; ஒரே இரவில் நடந்த விழா ஏற்பாடு!