ETV Bharat / city

'நாளை ஏற்படும் ஆட்சி மாற்றம், மக்களுக்கு நன்மை பயக்கும்..!' - மல்லை சத்யா - thoothukudi massacre

தூத்துக்குடி: "தேர்தல் முடிவுக்குப் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றம், மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும்" என்று, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நம்பிக்கை தெரிவித்தார்.

மல்லை சத்யா
author img

By

Published : May 22, 2019, 4:55 PM IST

ஸ்டெர்லைட் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லை சத்யா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மல்லை சத்யா கூறுகையில், "நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படியும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது, நாம் ஏதோ ஒரு சர்வாதிகார நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா

மக்கள் மனநிலையைப் பொறுத்தவரையில் ஸ்டெர்லைட் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்படும் நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படுவதில்லை. இந்த அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையைத்தான் தற்போதும் கொண்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கூறி வருகின்றனர். இதை தற்போது உள்ள அரசுகள் நிறைவேற்றாவிட்டாலும் நாளைய தினம், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மத்தியில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றமும் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சி மாற்றமும் நிச்சயம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்" என்றார்.

Intro:நாளை மத்திய மாநிலத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் - மல்லை சத்யா பேட்டி

Body:ஸ்டெர்லைட் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டுள்ளேன். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின்படி இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. இதைப் பார்க்கையில் நாம் ஏதோ ஒரு சர்வாதிகார நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மக்கள் மனநிலைமையை பொறுத்தவரையில் ஸ்டெர்லைட் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தடையும் அனுமதி மறுக்கப்படும் நின்ற நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படுவதில்லை. ஆகவே இந்த அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் நிலையை தான் தற்போதும் கொண்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கூறி வருகின்றனர். இதை தற்போது உள்ள அரசுகள் நிறைவேற்றாவிட்டாலும் நாளைய தினம் தேர்தல் முடிவுக்கு பின்னர் மத்தியில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றமும் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சி மாற்றமும் நிச்சயம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் என்றார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.