ETV Bharat / city

மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்கு காரணம் -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - ராமநாதபுரம்

தூத்துக்குடி: மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்கு காரணம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

வேலுமணி
author img

By

Published : Jun 26, 2019, 10:45 AM IST

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் நேரில் ஆய்வு செய்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் குடிநீர்த் தேவை மற்றும் மேலாண்மை, பசுமை வீடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

எஸ்.பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர்த் தேவை, விநியோகம், பசுமை வீடுகள் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மேலும் மத்திய அரசின் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தருமபுரி, சென்னை உட்பட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் மாற்று நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி, பேரூராட்சிகள் மூலமாக தமிழ்நாடு அரசு குடிநீர் மேம்பாட்டுக்கென ரூ.430 கோடியை ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்குக் காரணம் சென்னையில் மழை பெய்து வெகு நாட்களாகிவிட்டது. செயற்கை மழைத் திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது. இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது” என்றார்.

Intro:தமிழகத்தில் மழை பெய்யாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம் - தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டிBody:
தூத்துக்குடி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் நேரில் ஆய்வு செய்து அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் குடிநீர் தேவை மற்றும் மேலாண்மை, பசுமை வீடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் தேவை, விநியோகம், பசுமை வீடுகள் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மேலும் மத்திய அரசின் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சேர்க்கபடாமல் விடுப்பட்டு உள்ளனர். அவர்களை சேர்க்க வேண்டும் எனக்கோரி அதற்கான பணி நடைபெற்று வருகிறது. தர்மபுரி, சென்னை உள்பட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் மாற்று நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, பேரூராட்சிகள் மூலமாக தமிழக அரசு குடிநீர் மேம்பாட்டுக்கென ரூ.430 கோடியை ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம்
சென்னையில் மழை பெய்து வெகுநாட்களாகி விட்டது.
செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது.
இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு ஆற்றில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 10 ஆயிரத்து 600 வீடுகளை தமிழக அரசு அகற்றி உள்ளது. அங்குள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான பணிகளையும் அரசுசெய்தது.

ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த பணி இரண்டு மூன்று வாரத்திற்குள் முடிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.