தூத்துக்குடி: கடந்த மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பல சாலைகள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த சாலைகள் அனைத்தும் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மடத்தூர் பசும்பொன் நகர் ராஜகோபால் நகர், பால்பாண்டி நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: திரெளபதி அம்மன் கோயிலில் எருது விடும் விழா