தூத்துக்குடி: கோவில்பட்டிக்கு கடந்த 8ஆம் தேதி அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து சென்றநிலையில், அவரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை, விபத்துகள் ஏற்படும் முன்பாக மீண்டும் உரிய இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, முதலமைச்சரின் வருகைக்காக எட்டையபுரம் சாலையில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு உள்ள வேகத்தடை கோட்டாட்சியர் அலுவலகம் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட வேகத்தடைகள் தற்போது வரை நெடுஞ்சாலைத் துறையினரால் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: CCTV: வாகனம் நிறுத்துவதில் தகராறு - போலீஸ் விசாரணை