ETV Bharat / city

எரிவாயு குழாய் அமைக்கத் தளவாடங்கள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்! - ONGC pipe

தூத்துக்குடி: எரிவாயு குழாய் அமைப்பதற்குத் தளவாடங்கள் ஏற்றிவந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pottalkadu people protest against ONGC
author img

By

Published : Sep 23, 2019, 8:59 PM IST

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக பொட்டல்காடு கிராமத்திற்கு எரிவாயு குழாய் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இறக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்களை எடுத்துச் செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர்மக்களின் அனுமதியின்றி பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறாது என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். அதனைத்தொடர்ந்து லாரி முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லபட்டது.

லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

இதுகுறித்து பொட்டல்காட்டை சேர்ந்த கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொட்டல்காடு ஊர் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எங்கள் ஊரில் எரிவாயு குழாய் அமைக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளி, கோவில்கள் சமூக நலக் கூடங்கள் ஆகியவை உள்ளன. எரிவாயு குழாய் பாதிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் பொட்டல்காடு ஊர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். ஆகவே ஊர் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். குழாய் பதிக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொட்டல்காடு ஊர் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:கிராமத்தின் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - தளவாடங்கள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக பொட்டல்காடு கிராமத்திற்கு எரிவாயு குழாய் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு குழாய் பதிப்பதற்கும், இறக்கிவைக்கப்பட்டிருந்த குழாய்களை எடுத்துச் செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊர்மக்களின் அனுமதியின்றி பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறாது என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு குழாய் ஏற்றிவந்த முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொட்டல்காட்டை சேர்ந்த கந்தசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
பொட்டல்காடு ஊர் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எங்கள் ஊரில் எரிவாயு குழாய் அமைக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளி, கோவில்கள் சமூக நலக் கூடங்கள் ஆகியவை உள்ளன.
எரிவாயு குழாய் பாதிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருமேயானால் ஏதேனும் சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் பொட்டல்காடு ஊர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். ஆகவே ஊர் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மாறாக மாற்று வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொட்டல் காடு ஊர் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி: கந்தசாமிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.