தூத்துக்குடி: தூத்துக்குடி டுவிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆறுமுக நயினார். இவர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போது அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு இருசக்கர வானத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அதே தெருவில் உள்ள இவரது சகோதரர் ராமசாமியின் மகன் லட்சுமணன் வீட்டிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் மீது பட்டு லேசாக தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டின் வெளியே கையெறி குண்டின் ஜன்னல் திரிகள் சிதறிக்கிடந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இது குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை. காலையிலே இது குறித்து தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு மத்திய பாகம் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமியை விரைவில் சந்திக்கும் முதலமைச்சர்