தூத்துக்குடி: தூத்துக்குடி மச்சாது நகரில் உள்ள 'கேம்ஸ் வில்லி' அகாதமி சார்பில் மாநில அளவிலான டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகள் நேற்று (அக். 10) தொடங்கின. இதில், சென்னை, விருதுநகர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதுமிருந்து 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
நாளை பரிசளிப்பு
இதில், வீரர்கள் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு நாள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் நாளை (அக். 11) வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் சூரியராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் சன்தீஷ், கேம்ஸ் வில்லி அகாதமி ரெயிபின், திமுக மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜு