தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன் (22). இவர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்துவருகிறார். இன்று அலுவலக வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர், வேலை முடிந்ததும் ஓட்டப்பிடாரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் புதூர் பாண்டியபுரம் விலக்கில் திரும்பும்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.