தூத்துக்குடி: கோவில்பட்டி ராஜிவ் நகர் 3ஆவது குறுக்குத் தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
புகையிலை பொருள்கள் பறிமுதல்
அங்கு கிருஷ்ணசாமியின் மகன் ஜோதி (40) என்பவர் வீட்டின் முன்பாக எட்டு மூடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், ஜோதி கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் டீக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை