தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் பகுதியிலிருந்து தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
வேன் சில்லாநத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதியம்புத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பின்னர், அங்கு இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். பின்னர் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனில் வந்த மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயும், இருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் இரு பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி