தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மீனா ஆகியோர் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
![துணைத் தலைமை ஆசிரியை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-in-order-to-evoke-caste-feeling-dismissal-of-assistant-head-teacher-who-spoke-tn10066_16062022124419_1606f_1655363659_995.jpg)
இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, மீனா ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்