தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.
விழா நாள்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 10ஆம் நாளான 28ஆம் தேதி காலை 10 மணிக்கு தைப்பூசத் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையும் படிங்க:பக்தர்களின்றி நடைபெற்ற தைப்பூச திருவிழா!