ETV Bharat / city

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - கலவரம் - குற்றப்பத்திரிகையில் உள்ள 71 பேர் யார் யார்? - Sterlite Copper plant

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவலர் அல்லாத 71 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. சிபிஐ தாக்கல்செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பெயர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

author img

By

Published : Mar 24, 2021, 7:10 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22ஆம் தேதி கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தது. சர்வதேச அளவில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று வர்ணிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டன. எனவே இது குறித்து நீதி விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்திவருகிறது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழ்நாடு சிபிசிஐடி காவலர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். சிபிசிஐடி காவலர்கள் விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கலாம் எனக் கருதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் சிபிஐ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையில் முதற்கட்டமாகக் காவலர்கள் அல்லாத பொதுமக்கள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நிறைவுபெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் சிபிஐ தரப்பில் விசாரணை நிறைவடையாத நிலையில் தற்போது கூடுதலாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கைத் தாக்கல்செய்துள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசு அலுவலர்களுக்கு எதிராகப் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல், கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் காவலர்கள் அல்லாமல் மொத்தம் 71 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சிபிஐ தாக்கல்செய்துள்ள இந்த அறிக்கையில் காவலர் ஒருவரின் பெயரும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் குறித்த வேறு எந்தத் தகவல்களும் சொல்லப்படவில்லை.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பெயர்கள், அவரது விவரம் வருமாறு:-

வ.எண்.பெயர்தந்தை பெயர்கிராமம்
01விக்னேஷ் குமார் என்ற முனீஷ்குமார்சிதம்பரநகர்
02அருண் என்ற ஜோக்கர் ராஜாசுப்பிரமணியன் மடத்தூர்
03மாரிமுத்து என்ற சுவாமிகள் ஆறுமுகம்முத்துகிருஷ்ணபுரம்
04செந்தில் குமார் சிதம்பரம் மாதவன்நகர் மேற்கு அய்யனடைப்பு
05காமராஜ் கணேசன் முத்துகிருஷ்ணாபுரம்
06நிலவுடையார்சண்முகசுந்தரம் முனியசாமி நகர்
07துரைபாண்டி தங்கவேல் போடம்மாள்புரம்
08சக்திவேல்வடிவேல் விஇ ரைஸ் மில் சாலை
09பிரவீன் பால்ராஜ் பூபாலபுரம்
10ரோபஸ்ட் கிளைமண்ட்திரேஸ்புரம்
11பெரியசாமி ரமேஷ் எட்டயபுரம்
12வளன் என்ற அம்புரோஸ்அந்தோணி சாமி மேட்டுப்பட்டி
13நித்யானந்தம்சந்திரன் கிரேட் காட்டன் ரோடு (மேற்கு)
14ஐயப்பன்இசக்கிமுத்துஅன்புநகர்
15ராபர்ட் என்ற ஜேம்ஸ் ராபர்ட் நாக்ஸ்அந்தோணி பிச்சைபூபாலராயபுரம்
16ஆனந்த்பனிமயராஜ் பனிமயநகர்
17நிக்கோலஸ் டென்னின்ஸன்நவமணிதருவைகுளம்
18அஸ்வின்மணி பண்டாரம்பட்டி
19கோகுல் பிரசாந்த்கணேச மூர்த்திராஜகோபால்நகர்
20சார்லஸ் வினோத் ராஜ்அந்தோணி சாமிதிரேஸ்புரம்
21முத்து ராஜ் சேவியர் திரேஸ்புரம்
22மணி பேச்சிமுத்து முத்துகிருஷ்ணாபுரம்
23அந்தோணி பிரபுஃபிரான்சிஸ் பூபாலராயபுரம்
24பரமசிவன்சண்முகம் பிஎன்டி காலனி
25எட்வர்ட் ஸ்டீபன்ஆகாஷ் மில்டன்ராமநாடார் விளை தெரு
26ராமகிருஷ்ணன்அரிபுரதிரன்கோடம்பள்ளம்
27செந்தில் குமார்நாகராஜன்ரகமுத்தாலபுரம்
28புல்டான் ஜெசின்பாஸ்கர்பாத்திமா நகர்
29செல்வம்பாப்புஇனிகோ நகர்
30அம்பரீஷ்அந்தோணி ராஜ்இனிகோ நகர்
31பழனிசிந்தாமணிஅய்யர் விளை
32பெரியசாமிகணேசன்கிருஷ்ணராஜபுரம்
33 முகம்மது இப்ராஹிம்முகம்மது யூசுப்திரேஸ்புரம்
34கிஷோர் ஜேரோன்பனிமயநகர்
35ஜேசு பனிமய ஜான்மேத்யூஷ் திரேஸ்புரம்
36 ஜேரோம் ரோமன்ஸ்திரேஸ்புரம்
37 ராமர்ராஜபாண்டி நாடார்மடத்தூர்
38அஸ்வின்செல்வன்குரூஸ்புரம்
39 சந்தோஷ் ராஜ் கருவேலன்பண்டாரம்பட்டி
40ராஜா என்ற புல்கை ராஜாஃபிரான்சிஸ்சண்முகபுரம்
41மாடசாமிசெல்வம்மேட்டுப்பட்டி
42 பிரபாகர்சகாயராஜ்திரேஸ்புரம்
43சயீத் முஸ்தபாஜமால்தீன்சங்குலி காலனி
44 சுகுமார்மணிமில்லர்புரம்
45சுர்ஜித்சிலுவை அந்தோணி சேவியர்பனிமயநகர்
46மகேந்திரன்சுப்பையாபூபாலராயபுரம்
47 சுரேஷ்ஜெஸ்டின்பூபாலராயபுரம்
48 நஷ்ரின்அமலதாசன்திரேஸ்புரம்
49 மரிய தேவ சகாய ஜான்லூயிஸ்ரோச் காலனி
50 விமல் தஸ்நேவிஸ் லூர்தம்மாள்புரம்
51இனிகோபீட்டர்தட்டார் தெரு விரிவாக்கம்
52கெனிஸ்டன்சூசையாதிரேஸ்புரம்
53பாலமுருகன்குமாரசாமிகதிர்வேல் நகர்
54சண்முக சுந்தரம்மாடசாமிசிவாநந்தகுளம்
55அந்தோணி சுரேஷ்பீட்டர்திரேஸ்புரம்
56மரிய இருதய ராபர்ட் விஜய்அந்தோணியப்பாபாத்திமா நகர்
57இருதய ஜெயமாலைசத்ய அற்புதம்தாளமுத்து நகர்
58சுரேஷ்ஸ்டீபன்திரேஸ்புரம்
59 கிராஸ்வின்அஷ்கர்வடக்கு ராஜா தெரு, மதுரா கோர்ட்ஸ் மில்
60பிரான்சிஸ்அந்தோணி சாமிராஜிவ் நகர்
61பழனி குமார்லோகநாதன்கேடிசி நகர்
62இக்பால் கபீர்திரேஸ்புரம்
63முத்துகுமார்முருகேசன்தாளமுத்து நகர்
64 விமல் ராஜ் அந்தோணி ராஜ் கிருஷ்ணராஜபுரம்
65 அமலநாதன்அந்தோணி பிச்சை திரேஸ்புரம்
66 பென்ஹர் அலோய்பாத்திமா நகர்
67அஞ்ஜலன்செல்வம்பாத்திமா நகர்
68வினீத்வில்பிரட்இனிகோ நகர்
69ஆனந்த குமார்பால்மணிமீனாட்சிபுரம்
70மனோகரன்ஜீவா எழில்நகர்
71குணசேகர்கோபாலகிருஷ்ணன்பாக்கியலட்சுமி நகர்

இவ்வாறு சிபிஐ தாக்கல்செய்துள்ள குற்றபத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.