ETV Bharat / city

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை,Fishermen demand increase in fishing ban relief amount
fishermen-demand-increase-in-fishing-ban-relief-amount
author img

By

Published : Apr 15, 2021, 7:59 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இன்று (ஏப்.15) முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் சுமார் ஐந்து லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ஐந்தாயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் ஏன்?

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிக்க செல்வோர் 61 நாள்களுக்கு யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது என்றும் கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர் தர்ம பிச்சை பேட்டி

கடலுக்கு செல்லாத கப்பல்கள்

தடைக்காலம் நள்ளிரவே அமலுக்கு வந்ததால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலையிழப்பு

மீன்பிடி தடைக்காலத்தால் 13 கடலோர மாவட்டங்களிலும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடித் தடைகால நிவாரண தொகை ஐந்தாயிரத்தை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் நான்காயிரமாக இருந்த நிவாரணத்தொகை, தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பனைப்பொருட்கள் கலப்பட வழக்கு: மாநில குழுவின் தலைவர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.