தூத்துக்குடி: விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் பார்த்திபன் 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட நாளில் மீனவர்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, இன்று (செப். 2) ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்மீனவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர்கள் சங்கச்செயலாளர் ஜவகர், ”மீனவத்தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக, உரிமையை மீட்பதற்காக, மீனவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காக இன்னுயிர் நீத்த தலைவர் பார்த்திபன் ஏழாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்கிறோம்” எனக் கூறிய அவர் முதலமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார்.
அக்கோரிக்கைகளான,
”முதலாவதாக தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில், அடிப்படை உரிமைகள் இன்று வரை செய்யப்படாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலுக்கு போகின்ற சமயத்தில், எங்களுடைய பாதுகாப்பு பெரியளவில் கேள்விக்குறிதான். மீனவர்களைக் காப்பாற்றக் கூடிய படகு கரை ஓரமாக பழுது ஏற்பட்டு, துருப்பிடித்த நிலையில் உள்ளது.
மீனவத்தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க ஓய்விடம் ஏற்படுத்தப்பட வேண்டும். கழிப்பிட வசதி, ஆயிரக்கணக்கான பேர் வணிகம் செய்யப்படக்கூடிய இந்த இடத்தில் பாதுகாப்பினை உறுதி செய்யாத வண்ணம் உள்ளது. மேலும், எந்த இடத்திலும், பாதுகாப்பு கிடையாது. மருத்துவ வசதி கிடையாது, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழ்நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி பல ஆண்டு கோரிக்கைகளான, சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும்” என தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தார். பார்த்திபனின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று 245 விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச்செல்லாதது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மீன் பிடித்துறைமுகத்தில் உள்ள விசைப்படகு சங்கத்தில் வைத்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் பாத்திமா பாபு, கிருஷ்ண மூர்த்தி, மகேஷ் ஆகியோர் அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மீனவ நலன்களைப்பற்றி எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: தேங்காய்பட்டினத்தில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்