தூத்துக்குடி: தெற்கு காட்டன் ரோடு, லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மடோனா(40). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன் இவர் கணவர் நெஸ்டனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது தாயார் ரோசிட்டாவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) காலை 9 மணியளவில் மடோனா தனது தாயாரை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதோடு அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்துக்கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் மடோனா சமாதானம் அடையாமல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கதவை உடைக்க முயன்ற போது ; கதவை உடைத்தால் கேஸ்ஸை பற்ற வைத்துவிடுவேன் என மிரட்டிய மடோனாவையும், அவரது தாயையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும் மடோனாவை மனநல காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேசாம அப்பிடியே போயிருக்கலாம்..சுங்க கட்டணத்திற்கு பயந்து குறுக்கு வழியாக சென்ற லாரி.. ரயில்வே தடுப்பில் மாட்டி தவிப்பு