கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.21) நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமைத் தாங்கினார்.
காட்டு விலங்குகளால் சேதமடைந்த பயிர்களை அலுவலக வளாகத்துக்குள் கொட்டிய விவசாயிகள், பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்திவரும் காட்டு விலங்களை சுட்டு கொல்ல அனுமதி வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், “ எட்டயபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளான முத்துலாபுரம் , அழகாபுரி, வெம்பூர், கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களில் இந்தாண்டு ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் கம்பு, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம், உளுந்து, பாசி போன்ற சிறுதானியப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது, கதிர்களில் மணிபிடித்து வருகிறது.
இந்நிலையில், காட்டுயிர்களான மான், காட்டு பன்றிகள் போன்றவை விளை நிலங்களுக்குள் உள் புகுந்து மகசூலை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. கூட்டங்கூட்டமாக வந்து கதிர்களை அழிக்கின்றன.
மகசூல் எடுக்கும் நேரத்தில் இதுபோன்ற இடர்பாடுகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மான், காட்டு பன்றிகளை சுட விவசாயிகள் அனுமதி தர வேண்டும். அல்லது விளைநிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்திவரும் விலங்குளை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும். அத்துடன், காட்டு விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு