ETV Bharat / city

தூத்துக்குடியில் மக்களைச் சந்தித்த திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! - DMK Election Report Preparation Committee meets people in Thoothukudi

தூத்துக்குடி: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவானது தூத்துக்குடியில் இன்று (டிச. 28) மக்களைச் சந்தித்தது.

தூத்துக்குடியில் மக்களை சந்தித்த திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

author img

By

Published : Dec 29, 2020, 6:32 AM IST

எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை களைகட்டியுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தேர்தலின் முக்கிய அங்கமான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி திமுகவில் வேகம் எடுத்துள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், பொருளாளருமான டி.ஆர். பாலு எம்.பி. தலைமையில் மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி, கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவானது, தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவருடனும் கலந்தாலோசித்து, அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது.

தூத்துக்குடியில் மக்களைச் சந்தித்த திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டி.ஆர். பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் இன்று மாலை தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடைந்தனர். தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தூத்துக்குடி திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், சிறுதொழில் முனைவோர், மீனவ அமைப்பினர், விசைப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட அமைப்பினர்களிடமிருந்து கருத்து கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : சேலம் வந்தடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.