மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டி, ஆழ்கடலுக்குள் சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் மறு அறிவிப்பு வரும் வரை மீன்வர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அறிவிப்புபலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தருவைக்குளம், திருச்செந்தூர், மணப்பாடு, பெரியதாழை, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை துறைமுகத்தில் கட்டி வைத்துள்ளனர்.
மேலும், கடலுக்குள் சென்ற மீனவர்களை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15ஆவது ஆண்டு சுனாமி தினம்; மீளாத துயரத்தில் மக்கள்!