மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக்கத்திற்கு கீழ் செயல்பட்டுவரும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா செயல் உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இலக்கியம், வரலாறு, அறிவியல், பொருளாதாரம், சிறுகதைகள், இதிகாசங்கள், உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. 10ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் தினசரி மாலை அறிஞர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கு பெறும் கருத்தொளி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத் திருவிழாவை பார்வையிட கட்டணமில்லா போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
இதையும் படியுங்க: