விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மூன்றாண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதை மத்திய மாநில அரசுகள் சாதனையாக கூறிவருவதாக கூறினார். ஆனால், அங்கு இதுவரை ஒரு செங்கல்லைக்கூட அவர்கள் கட்டவில்லை என்றும், அந்த செங்கலை தற்போது தான் எடுத்து வந்துள்ளதாகவும் கூறி, மக்களிடையே ஒரு செங்கல்லையும் எடுத்துக் காட்டினார்.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து, செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது, பாஜக நிர்வாகியான கோவில்பட்டியைச் சேர்ந்த நீதிபாண்டியன் என்பவர், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் இணைய வழியில் புகார் அளித்துள்ளார்.
![செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-bjp-executive-compliant-udhayanithi-photo-script-7204870_26032021181822_2603f_1616762902_413.jpg)
இதையும் படிங்க: அதிமுகவிற்கு மாற்று திமுக அல்ல; இரண்டுமே ஏமாற்று!