ETV Bharat / city

'விடியலுக்காக' முதலமைச்சரை நோக்கி சைக்கிள் பயணம்! - தூத்துக்குடி

தூத்துக்குடியின் விடியலுக்காக முதலமைச்சரை நோக்கி ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் சைக்கிள் பரப்புரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
anti sterlite group organizer krishnamoorthy press meet
author img

By

Published : Jul 12, 2021, 7:22 PM IST

Updated : Jul 12, 2021, 8:05 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை இன்று (ஜூலை 12) சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூச்சுக்காற்றை நச்சுக் காற்றாக்கி மண்ணையும் மக்களையும் அழித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜனை உற்பத்தி என்கிற போர்வையில் மீண்டும் ஆறு மாதத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

சட்டம் இயற்ற வேண்டும்

மாநில அரசு இதற்கு உள்பட கூடாது அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திடக் கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். அதே நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற, சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

தூத்துக்குடியின் மத்தியப் பகுதியில் இந்த மண்ணுக்காக, மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 15 பேரின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். அதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 90 நபர்களின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

எனவே அவர்கள் குறித்து அறிக்கை தயார்செய்து அவர்களுக்கும் அரசு பணி வழங்க கோரிக்கைவைத்துள்ளோம்.

விடியலைத் தேடி

அது மட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்படாமல் மக்கள் போராட்டம் இந்த மண்ணை விட்டு நீங்கவே நீங்காது. விடியலைத் தேடி என்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை சந்தித்தை போல், நாங்கள் தூத்துக்குடியின் விடியலுக்காக முதலமைச்சரை நோக்கி சைக்கிள் பரப்புரை பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் பரப்புரை பயணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம். வரும் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்த நச்சு ஆலையின் கதவுகள் திறப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் எந்தவிதத்திலும் உடன்பட மாட்டார்கள். மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் மீண்டும், மீண்டும் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தமிழ்நாடு அரசு எங்களைத் தள்ளக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: பணிகள் துரிதமாக நடைபெறுகின்றது - கனிமொழி எம்.பி.,

Last Updated : Jul 12, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.