ETV Bharat / city

தமிழ்நாட்டில் கால்நடைகளை பாதுகாக்க ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டில் கால்நடைகளை பாதுகாக்க 235 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட இருப்பதாக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கால்நடைகளை பாதுகாக்க ஆம்புலன்ஸ்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Oct 13, 2022, 10:06 PM IST

தூத்துக்குடி: கால்நடைகள் நோயற்ற நிலையில் இருக்க வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் 7ஆயிரத்து 760 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று (அக்.13) நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் மேலதட்டப்பாறையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சிறப்பாக கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் கால்நடைகள் நோயில்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் 7ஆயிரத்து 760 கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம் இங்கு தொடங்கபட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 20 கால்நடை முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கால்நடைகளை பாதுகாக்க ஆம்புலன்ஸ்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

கால்நடைகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்று எனும் கணக்கில் கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.